செவ்வாய், 30 மார்ச், 2010

ஒரு வண்டியின் உண்மை கதை


எத்தனை பேருக்காக,எத்தனை குடும்பத்துக்காக நான் உழைத்து இருப்பேன். எத்தனை பேர் இங்கு வந்து போய் இருப்பார்கள் அத்தனை பேரினதும் குடும்பத்துக்காக நான் உழைத்து இன்று தேய்ந்து ஓர் ஓரமாக நின்று கொண்டு இருக்கிறேன். இன்று என்னை மறந்து விட்டார்கள்.

எனது பிறப்பிடம் வேறு ஏதோ ஒரு நாடுதான். ஆனால், இந்த நாடுதான் என்னை தத்தெடுத்து கொண்டது. இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன்பு கடல் மார்க்கமாக இந்த நாட்டில் தடம் பதித்த நான், என் வாழ்வில் பல எஜமான்களை கண்டு விட்டேன். அவர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். ஆனால், நான் மட்டும் ஒரே இடத்தில அவர்களுக்காக காத்து இருப்பேன். அவர்களுக்கு மட்டுமா? அவர்களின் குடும்பத்தை சுமந்தேன். அவர்களின் உறவுகளை சுமந்தேன். என் வாழவில் என் எஜமான்களின் குடும்பத்துடன் நான் கழித்த நாட்களே அதிகம்!!! காலை என்ன? மாலை என்ன? பகல் என்ன? இரவு என்ன? எப்போதுமே அவர்களை சுமக்க நான் பின்நின்றது இல்லை. சில எஜமான்களின் வாண்டுகள் என்னை குத்தி கிழித்து இருந்த போதும், அதை எல்லாம் அசட்டை செய்யாமல், அவர்களின் மனைவிமார் கடைசிக்காலத்தில் என்னை ஓட்டை வண்டி என்று என் காதுபடவே திட்டி தீர்த்த போதும் அவர்களுக்காக எதனை தடவி உழைத்து இருப்பேன். என் எஜமானின் தேர்தல் கால சேவை முதல், அவர ஆட்களை சுமப்பது முதல், ஏன்? பல காலங்களில் போஸ்டர்கள் ஒட்டும் ஊறைவிடமாக கூட இருந்து இருக்கிறேன். இப்பொது என்னை மறந்து விட்டார்கள். அவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏன் அவர்கள் அப்படி? அப்படியானால் நான் யாருக்கு உரிமையாளன்?






இத்தனைக்கும் நான் அரச நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த கொண்டு வரபட்ட வண்டி. இன்று புதிதாக அந்த சேவையை செய்ய ஒருவர் வந்து இருக்கிறார். எனவே, நான் ஓதுங்கி விட்டேன் ............ இல்லை இல்லை ஒதுக்கபட்டுவிட்டேன்!!!


இதுதான் இப்போது உண்மை!!!