திங்கள், 19 ஏப்ரல், 2010

Nadpudan Kathal நட்புடன் காதல்

அன்பு யார் மீதும்
காட்டலாம் ஆனால்
"கோபம்" உயிருக்கு மேலான உரிமை
உள்ளவர்கள் மீது மட்டுமே காட்ட முடியும்

லேபிள்கள்: ,

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

பையா – திரை விமர்சனம்


பையா படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கின்றது. படத்துக்கு இருக்கும் அதிகரித்த எதிர்பார்ப்பை இந்த படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பது என் கருத்து....!

தமிழ் சினிமாவின் பழைய காதலுக்கு புதிய முலாம் பூசி லிங்குசாமி தந்து இருக்கும் படம்தான் பையா. படத்தின் நாயகனின் அறிமுக காட்சி, நாயகியின் அறிமுக காட்சி என்று எந்த பில்டப்பும் இல்லாமல் கார்த்தியும், தமன்னாவும் அறிமுகம் ஆகும் காட்சி அருமை!!!! கார்த்தி தன்னை நிருபித்து இருக்கிறார். பல இடங்களில் கண்களால் தன் அண்ணாவை நினைவுபடுத்துகிறார். தன் உண்மை தோற்றத்தில் இந்த படத்தில் நடித்து இருப்பதால் அழகாகவே தெரிகிறார். காமெடி,ஆக்ஷன், காதல் என எல்லா காட்சிகளிலும் தன்னை நிருபித்து இருக்கிறார்.

அடுத்து, தமன்னா நடிப்பில் அழகோ அழகு! நாயகன் கூட படம் முழுதும் பயணம் செய்யும் நாயகி வேடம். பல இடங்களில் சறுக்கல் இருந்தாலும் அவை முன்னைய படங்களில் அவர் விட்ட தவறுகள் போல இல்லை. எனவே, ரசிக்கலாம். படத்தில் குறைவான கதாபாத்திரங்கள் தங்கள் பங்கை நிறைவாக செய்து இருக்கின்றபோதும் படம் முடிந்து வீடு திரும்பும் போது படம் மனதில் ஒட்டாத எண்ணமே இருக்கிறது!

இதைவிடவும் படத்துக்கு பலம் இசையில் யுவனும், வில்லனாக வரும் அவருமே! அழகான வில்லனாக மிரட்டி இருக்கிறார். பாடல்களில் நம்மை கட்டி போடும் யுவன், சண்டை காட்சிகளின் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். உண்மையை சொல்ல போனால் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்! காதல் சொல்ல நேரம் இல்லை..... பாடலில் பின் படம் பார்த்த அனைவரிலும் ஒரு அமைதியை திரையரங்கில் காண முடிந்தது. உண்மையில் யுவன் இளைய உள்ளங்களை கட்டி போடும் இசை மன்னனாக இந்த படத்தில் வலம் வருகிறார்.

படத்தின் கதைப்படி கார்த்தி வேலை இல்லாத இளைஞன். இவருக்காக வேலை தேடும் நண்பர் கூட்டம் இவருடன் சேர்ந்து இவருக்காக பெங்களூர் பயணிக்கிறது. அங்கு பஸ்சில் பார்த்த தமன்னா அவர் INTERVIEW போகும் இடத்தில குறுக்கே வர வந்த வேலையை விட்டுவிட்டு அவர் பின்னே சென்றும், அவரை தவற விட்டுவிடுகிறார். பின்பு, நண்பனின் காரை எடுத்து கொண்டு நண்பனை கூட்டிவர புகையிரத நிலையம் செல்லும் அவர் வழியில் தமன்னாவுக்கே வண்டி சாரதி ஆகிவிடுகிறார். அவருக்கு சாரதி ஆகி, அவரை மும்பாய்யில் இருக்கும் பாட்டி வீடுக்கு கூட்டி செல்லும் வழியில் தமன்னாவை ஒரு ரவுடி கும்பல் துரத்த, கார்த்தியை ஒரு ரவுடி கும்பல் துரத்த அதற்க்கு விடை காணும் விதமாக படத்தின் இறுதி காட்சிகள் அமைந்து இருக்கின்றன.

படத்தின் முக்கால்வாசி நேரம் கார்த்தி, தமன்னா, கார் என்றே படம் நகர்கின்றது. நகைச்சுவைக்கு என்று ஒருவர் இல்லாத குறையை கார்த்தியும், அவரது நண்பர்களும் நிவர்த்திக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். லிங்குசாமி ஒவ்வரு காதாபாத்திரத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி இருந்தாலும், கதையை இன்னும் கொஞ்சம் செதுக்கி இருக்கலாம்
                                                   
பையா-யுவன் இல்லாமல் இளைஞர்களை கவர்வது கஷ்டமே!

லேபிள்கள்: , , , ,

செவ்வாய், 30 மார்ச், 2010

ஒரு வண்டியின் உண்மை கதை


எத்தனை பேருக்காக,எத்தனை குடும்பத்துக்காக நான் உழைத்து இருப்பேன். எத்தனை பேர் இங்கு வந்து போய் இருப்பார்கள் அத்தனை பேரினதும் குடும்பத்துக்காக நான் உழைத்து இன்று தேய்ந்து ஓர் ஓரமாக நின்று கொண்டு இருக்கிறேன். இன்று என்னை மறந்து விட்டார்கள்.

எனது பிறப்பிடம் வேறு ஏதோ ஒரு நாடுதான். ஆனால், இந்த நாடுதான் என்னை தத்தெடுத்து கொண்டது. இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன்பு கடல் மார்க்கமாக இந்த நாட்டில் தடம் பதித்த நான், என் வாழ்வில் பல எஜமான்களை கண்டு விட்டேன். அவர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். ஆனால், நான் மட்டும் ஒரே இடத்தில அவர்களுக்காக காத்து இருப்பேன். அவர்களுக்கு மட்டுமா? அவர்களின் குடும்பத்தை சுமந்தேன். அவர்களின் உறவுகளை சுமந்தேன். என் வாழவில் என் எஜமான்களின் குடும்பத்துடன் நான் கழித்த நாட்களே அதிகம்!!! காலை என்ன? மாலை என்ன? பகல் என்ன? இரவு என்ன? எப்போதுமே அவர்களை சுமக்க நான் பின்நின்றது இல்லை. சில எஜமான்களின் வாண்டுகள் என்னை குத்தி கிழித்து இருந்த போதும், அதை எல்லாம் அசட்டை செய்யாமல், அவர்களின் மனைவிமார் கடைசிக்காலத்தில் என்னை ஓட்டை வண்டி என்று என் காதுபடவே திட்டி தீர்த்த போதும் அவர்களுக்காக எதனை தடவி உழைத்து இருப்பேன். என் எஜமானின் தேர்தல் கால சேவை முதல், அவர ஆட்களை சுமப்பது முதல், ஏன்? பல காலங்களில் போஸ்டர்கள் ஒட்டும் ஊறைவிடமாக கூட இருந்து இருக்கிறேன். இப்பொது என்னை மறந்து விட்டார்கள். அவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏன் அவர்கள் அப்படி? அப்படியானால் நான் யாருக்கு உரிமையாளன்?






இத்தனைக்கும் நான் அரச நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த கொண்டு வரபட்ட வண்டி. இன்று புதிதாக அந்த சேவையை செய்ய ஒருவர் வந்து இருக்கிறார். எனவே, நான் ஓதுங்கி விட்டேன் ............ இல்லை இல்லை ஒதுக்கபட்டுவிட்டேன்!!!


இதுதான் இப்போது உண்மை!!!